SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
00:00
00:00

Ringkasan episode

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் அதிகரித்து வருவதுடன், வாழ்க்கைச் செலவுகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வரும் நிலையில் வீட்டுக் கடன் வைத்திருக்கும் குடும்பங்களும் வணிக நிறுவனங்களும் கூடுதல் பொருளாதாரச் சுமையைச் சந்திக்கின்றன.இந்தப் பொருளாதாரச் சூழலுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் எந்த அளவுக்குப் பயனளிக்கின்றன? என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பல பொருளாதார கட்டுரைகளை எழுதியுள்ள கோவிந்தராஜன் அப்பு அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்

Episode

14764-

விலைவாசி முதல் வட்டிவீத உயர்வு வரை: என்ன நடக்கிறது ஆஸ்திரேலியாவில்?

04 Nov 2026
14763-

Parramatta Powerhouse அருங்காட்சியகம் - மேற்கு சிட்னியின் புதிய கலாச்சார அடையாளம்!

மேற்கு சிட்னியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பாரமட்டா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பவர்ஹவுஸ் அருங்காட்சியகம் நவம்பர் 7ஆம் தேதி பொதுமக்களுக்காகத் திறக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast A new cultural landmark for Western Sydney – Powerhouse Parramatta Museum opens

04 Nov 2026
14762-

வீடு வாங்க வசதி இல்லையா? ஒருவேளை அது உங்களுக்குச் சாதகமான ஒன்றாக இருக்கலாம்

நீங்கள் விரும்பும் இடத்தில் வீடு வாங்குவதற்குப் போதிய வசதி இல்லாததால், வாடகை வீட்டில் வசிக்கும் இலட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களில் ஒருவராக நீங்களும் இருக்கலாம். இத்தகைய சூழலில், வேகமெடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு பந்தயத்தில் நீங்கள் பின்தங்கியிருப்பதாக உணரக்கூடும். ஆனால், முற்றிலும் மாறியுள்ள தற்போதைய பொருளாதாரச் சூழலில், நம் வாழ்வின் சில கட்டங்களில், வீடு வாங்குவதை விட வாடகை வீட்டில் வசிப்பதே நிதிப் பாதுகாப்பிற்கான சிறந்த வழியாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகச் சில நிபுணர்கள் கூறுகின்றனர். Camille Bianchi மற்றும் Kerrin Thomas ஆகியோர் எழுதிய விவரணத்தின் அடிப்படையில், இது குறித்து குலசேகரம் சஞ்சயன் தமிழில் முன்வைக்கும் செய்தியின் பின்னணி இது. #sbsaudiopodcast Can't afford to buy a home? You might just be better off

04 Nov 2026
14761-

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் சவால்கள் என்ன? எப்படிச் சமாளிப்பது?

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்க்கையில் தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளன. குழந்தைகள் எதிர்கொள்ளும் மனரீதியான சவால்களைப் பெற்றோர் எவ்வாறு அடையாளம் காணலாம் என்று குழந்தை வளர்ப்பு தொடர்பாக விளக்குகிறார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையவழி ஆலோசனை சேவைகளை வழங்கி வருகின்ற Mind Matterz Counselling mind-matterz-counselling.netlify.app நிறுவனர் இளவரசி ராஜா அவர்கள். Australian Counselling Association-இன் பதிவு பெற்ற ஆலோசகரான இளவரசியுடன் பிரிஸ்பேனில் உள்ள 4EB தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் SBS தமிழ் ஒலிபரப்புக்காக உரையாடியவர் றைசெல். #sbsaudio podcast What challenges do parents face in raising children, and how can they overcome them?

04 Nov 2026
14760-

இன்றைய செய்திகள்: 04 நவம்பர் 2026, புதன்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (04 November 2026 - Wednesday)

04 Nov 2026